Tuesday, April 10, 2012

Huda Arrived!!! MASHA ALLAH

எனது தந்தையின் தங்க மகள் இன்று காலை ஹுதா என்ற பொன் மகளை பெற்றுள்ளாள்... தன் பொன் மகளை கையில் முதலில் யந்தியது ஒரு மகிழ்ச்சியான தருணம் என்று கூறுகிறார் mr தாரிக் மச்சான்...

புகைப்படம் விரைவில்...

நல்ல விதமாக தாயும் சேயும் இருக்க இறைவனை வேண்டுகிறோம்.. 

-தாய் மாமன்
 

Friday, February 24, 2012

NMA Jabbar 24/02/2012

Alhamdhulillah. Alhamdhulillah.

Asma and Naseema had their convocation today. Both of them received their degree in their respective subjects (Nutrition & Dietetics and Computer Science) FIRST CLASS WITH DISTINCTION.


Surprisingly happy part of the convocation was that Asma got special recognition of TWO GOLD MEDALS for getting two university ranks - 6th Rank in French and 10th Rank in N&D in whole of Madras University. Alhamdhulillah again. This is the first time in our family that some one has received an University Rank and Medal for academic excellence in University Examination. A happy moment for the parents and the family. All Praise to Allah.

Thursday, February 9, 2012

Funny Real Stroy--- Posted by Safeer

தமிழ்நாடிலிருந்து ஒரு பாவா துபாய்க்கு வந்திருதார்.. ரோட்டில் நடந்து போகும்போது கூட வந்திருந்தவரிடம் 
பாவா : தம்பி அது என்ன "ஹுவல்லதி இன்ன" அப்டின்னு போட்டிருக்கு.
தம்பி : பாவா அது "ஹுவல்லதி இன்ன" இல்ல ---  Holiday Inn Hotel

Hope somebody knows where it happens.

Ibrahim Bapu & Anas........ Posted by Safeer

Tuesday, February 7, 2012

 An interesting poetry enjoyed recently - NMA Jabbar

கைரேகைகலில் 
சிக்கல் விழுந்துவிட்ட 
இந்தக் காலத்திலும் 
குலம் என்கிறாய் 
கோத்திரம் என்கிறாய் 

 உன்குலத் தொழிலைத்தான் 
செய்துகொண்டிருக்கிராயா  நீ?

உஞ்ச விருத்தி  செய்துதான் 
உயிர் வாழ்கிறானா பிராமணன்? 
ஆட்சி பீடம் தவிர 
வேறெங்கும் அமர்வதில்லையா சத்ரியன்? 
வைசியன் மட்டும்தான் 
தராசு பிடிக்கிறனா? 
ஏர் ஒட்டுகிரவனெல்லாம் 
சூத்திரனா?
வயிற்ற்றுக்காக முந்தானை விரிக்கத் தொடங்கிவிட்ட பிறகு 
இன்னும் எதற்கு 
பத்தினிப் பட்டம்?
ஞானிகள் செய்ய முடியாததை 
விஞ்ஞானி செய்துவிட்டான்.
இதோ
நீயே மழித்துக்கொள்கிறாய் ;
நீயே துவைத்துகொள்கிறாய்;
ஏன்
கழிப்பறையைக் கூட 
நீயே கழுவிவிடுகிறாய்.
இனி
யாரைப் பார்த்து 
"எட்டி நில்," என்பாய்?  

 --- கவிக்கோ அப்துல் ரகுமான்
"சுட்டு விரல்"நூலில் இருந்து 







உஞ்ச varuthi seythu than


Monday, February 6, 2012

கால ஓட்டத்தில் காணாமல் போனவை!!!

நீண்ட நாட்களாக எழுத வேண்டும் என்று நினைத்தவை...
நாம் சின்ன வயசுல உபயோகித்த பல பொருட்கள் பல பெயர்கள் இப்போது இல்லை.. அவற்றை நினைவு கூற ஒரு பதிப்பு...

1 அரிக்கேன் விளக்கு and முட்ட விளக்கு:
கரண்டு போயடுச்சுனா ஒடனே தேடனும் இது ரெண்டும் எங்கே இருக்குனு. ஆனா இப்போ UPS . கரண்ட்டு போயிடுச்சானு கேட்டு பீல் பண்ணுறது இல்ல... UPS போயடுசுனாதான் கஷ்டம். 

2 ரெண்டு கண்ணா and டின்னு மாக்கான்...
இவங்க ரெண்டு பேரும் இல்லனா நம்ம வீடு சிங்கங்கள பயம் காட்ட சிங்கம் வந்தாலும் முடியாது... (நான் மட்டும் இதுக்கு விதிவிலக்கு)... இப்போ யோசிச்சு பார்க்கும் போது ரெண்டு ரூமா காட்டியே நம்மள பயம் காட்டி அடக்கி வச்சு இருக்காங்க...  

3 சிறுவர் மலர் and காமிக்ஸ் புக்...
வெள்ளிகிழமைனா ஒரு பெரிய சண்டையே நடக்கும்... யாரு அந்த புக் first படிக்குறதுனு... மாயாவி, இரும்புக்கை மாயாவி, பிரம்போ ரொம்ப விரும்பி படிச்சா கதாபாத்திரங்கள்.... ஆனா இப்போ யாரு அதெல்லாம் படிக்குறா... இப்போலாம் GOD OF WARS அப்புரம் என்ன என்னமோ பெற சொல்லுறாங்க...

4 கேப்பார்கடுக்கி...
இந்த பெற வச்சே நம்ம கேள்விதிறனையும் மழுங்க அடிசுடாங்க நம்ம வீடு mummys எத கேட்டாலும் கேப்பார்கடுக்கி.. 
காணாமல் போன விளையாட்டுகள்:
  1.   ciggrette அட்டைல கட்டமா ஒன்னு செஞ்சு கலால செதுக்குற விளையாட்டு...
  2.   பம்பரம்... ரெண்டுரூவா பம்பரம்... அது வெட்டு வாங்கிட்ட ஐயோ கழுத்துல வாங்குன மாதிரி ஒரு பீல்... இப்போ அதெல்லாம் பாக்க முடியல... நம்ம பம்பரத்த வேட்டுனவனோட பம்பரத்த சம்மட்டி அடிக்குற சுகம் இறுகிய அப்பப்ப... 
  3. பளிங்கி... ஸ்கூல் ல std இருக்குறா மாதிரி இதுலேயும்... நான் ரெண்டு மூணு னு விளையாடிகிட்டு இருக்கும் போது சபீர் பாய் ஜூபைர்பாய் 20 50 100 .  பாய்ட்ட கடன் வாங்குன பலிங்கிய தோத்துட்டா பதில் சொல்ல பயம் இருக்கும்... ஆனா பாய்ங்க திட்ட மாட்டாங்க... தம்பி இன்னிக்கு உன் கை சரி இல்ல விளையாடாத... இவளோ தான்...
  4. கிட்டி புள்ள... நமக்குள்ள ஒரு சச்சின் கங்குலி ஷேவாக் ஜாகிர் எல்லாம் அப்போவே இருந்து இருக்காங்க...  surveyour கூட அவளோ கரெக்ட்ஆ அளப்பாங்கலான்னு சந்தேகம் தான்.. பயபுள்ளங்க சொத்த அளக்குறமாதிரி ஒரு mm கூட விட மாட்டானுங்க... பீர்மா வீட்ல எப்டித்தான் பொறுத்துகிட்டன்களோ ....
  5. கொத்துவால்... குற்றால துண்டும் நாலு புளியான்கொட்டையும் தான் தேவை... ஆன பல பேர அழவைகுற ஆட்டம்... யப்பா.. திருடனுக்கு உள்ள நம்பர் விழுந்துடுசுன.. அடி வாங்காமையே கண்ணுல தண்ணி வரும்..
எழுத இன்னும் எத்தனயோ இருக்கு... எல்லாரும் எழுதுங்க...
 எங்க காலத்துலேயே இவளோ மாறிடுச்சுன்ன பாப்புங்க நிறைய பாத்து இருப்பீங்க...


 

Thursday, February 2, 2012

துப்பாக்கி தேவை


This was selected as a best Blog... Really nice to read.. Got it in email...


நீ சொன்னாய் என்பதற்காகத்தான் உனது அப்பாவிடம் பேசிப் பார்க்கலாம் என்ற முடிவுக்கு வந்தேன். ‘அலுவலகத்தில் இருக்கிறேன், நீல்கிரிஸில் சாயங்கலாம் சந்திக்கலாம்என உன் தகப்பன் தொலைபேசியில் சொன்னபோது கடமை தவறாதவனின் மகளைத்தான் காதலித்திருக்கிறோம் என இறுமாந்திருந்தேன்.

சொன்னபடி ஐந்து மணிக்கெல்லாம் வந்தமர்ந்த உனது அப்பனைப் பார்த்த போது 'எருமை மாட்டிற்கு மான் குட்டி எப்படி பிறந்தது?!' என்ற பழைய கவிதைதான் நினைவிற்கு வந்தது. மான்குட்டி என்ற வர்ணனை உனக்கு அதிக பட்சம்தான் என்றாலும் எருமை மாடு என்பது உனது அப்பனுக்கு மிகக் குறைந்த பட்சம்தான். அந்தக் கடையில் பில் போடுவதற்காக இருந்த கம்ப்யூட்டரைத் தவிர மீதம் இருந்த அனைத்தையும் தின்று தீர்த்துவிடும் வெறி அவரது கண்களில் மின்னியதை நான் கவனிக்கத் தவறிவிட்டேன். சரி எதையாவது சாப்பிட்டுவிட்டு பேச்சைத் துவங்கலாம் என சர்வரை அழைத்தேன். அதற்குப் பின் உனது அப்பனின் கைங்கர்யத்தால் சமையல் கட்டிற்கும் டேபிளிற்கும் இடையே சுமார் ஐம்பது ஓட்டங்கள் எடுத்தான் சர்வர். ராயப்பாஸிலும், தலப்பாகட்டிலும் நீ ஃபுல் கட்டு கட்டுவது ஒரு ஜெனடிக் பிரச்சனை என்பதைக் கண்டுகொண்டேன். வேழ முகம்தான் இல்லையே தவிர பேழை வயிறு இருக்கிறது உன் பரம்பரைக்கே...

அவரது வேட்டையை முடிவுக்கு கொண்டு வர இயலாதவனாக கையறு நிலையில் இருந்தபோது ' தம்பி இப்பல்லாம் முன்ன மாதிரி சாப்பிட முடியறதில்லபா... வயசாச்சில்ல...' என தன் திருவாய் மலர்ந்தார். திடப்பொருட்களிலிருந்து ரோஸ்மில்க் போன்ற திரவப் பொருட்களுக்கு மாறினார். அப்பாடா, முடித்து விட்டார் என்ற ஆசுவாசத்தை 'ஒரு கஸாடா' என்ற வார்த்தையில் உடைத்தார். கஸாட்டாவும், ஜர்தா பீடாவும் சாப்பிடுவதில்லை என்பதைத் தவிர திருச்செந்தூர் கோவிலில் உண்டைக்கட்டிக்குக் காத்திருக்கும் கோவில் யானைக்கும் உனது அப்பனுக்கும் ஆறு வித்தியாசங்கள் கூட இல்லை. 'தம்பி எப்ப சாப்பிட்டாலும் கடைசியா ஒரு ஐஸ் க்ரீம் சாப்பிடுறது நல்லதுப்பா' என்ற அவரது கூற்றில் இருந்த கடைசியா எனும் வார்த்தைதான் எனக்கு வாழ்வின் மீது நம்பிக்கையை ஏற்படுத்தியது.

'
சார், நான் உங்க பொண்ணை விரும்புறேன். அவளையே கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுறேன். அது விஷயமாப் பேசத்தான் உங்களுக்கு போன் பண்ணினேன்' என்று மெல்ல பேச்சைத் துவங்கினேன். 'அப்ப போனவாரம் இதே விஷயமாப் பேச 'ஆனந்த பவனுக்கு' வந்தது நீங்க இல்லையா தம்பி?!' என ஆச்சர்யமாக அவர் கேட்டபோதுதான், மொத்தக்குடும்பமும் இரை எடுப்பதற்கென்றே எவனையாவது இரையாக்குவதை புரொபஷனல் டச்சோடு செய்கிறீர்கள் என்பதை உணர்ந்தேன். " தம்பி இது பெரிய விஷயம், ஒரு நாளில் பேசித் தீர்த்துவிட முடியாது. நீங்க ஒன்னு பண்ணுங்க... நாளக்கி சாயங்காலம் அன்னபூர்ணா வந்துடுங்க... அப்ப பேசிக்கலாம்" என்ற உனது தகப்பனைக் கொலை செய்ய அந்த நேரம் என்னிடம் துப்பாக்கி இல்லாமல் போனது துர்பாக்கியமே.