Tuesday, February 7, 2012

 An interesting poetry enjoyed recently - NMA Jabbar

கைரேகைகலில் 
சிக்கல் விழுந்துவிட்ட 
இந்தக் காலத்திலும் 
குலம் என்கிறாய் 
கோத்திரம் என்கிறாய் 

 உன்குலத் தொழிலைத்தான் 
செய்துகொண்டிருக்கிராயா  நீ?

உஞ்ச விருத்தி  செய்துதான் 
உயிர் வாழ்கிறானா பிராமணன்? 
ஆட்சி பீடம் தவிர 
வேறெங்கும் அமர்வதில்லையா சத்ரியன்? 
வைசியன் மட்டும்தான் 
தராசு பிடிக்கிறனா? 
ஏர் ஒட்டுகிரவனெல்லாம் 
சூத்திரனா?
வயிற்ற்றுக்காக முந்தானை விரிக்கத் தொடங்கிவிட்ட பிறகு 
இன்னும் எதற்கு 
பத்தினிப் பட்டம்?
ஞானிகள் செய்ய முடியாததை 
விஞ்ஞானி செய்துவிட்டான்.
இதோ
நீயே மழித்துக்கொள்கிறாய் ;
நீயே துவைத்துகொள்கிறாய்;
ஏன்
கழிப்பறையைக் கூட 
நீயே கழுவிவிடுகிறாய்.
இனி
யாரைப் பார்த்து 
"எட்டி நில்," என்பாய்?  

 --- கவிக்கோ அப்துல் ரகுமான்
"சுட்டு விரல்"நூலில் இருந்து 







உஞ்ச varuthi seythu than


No comments:

Post a Comment