நீண்ட நாட்களாக எழுத வேண்டும் என்று நினைத்தவை...
நாம் சின்ன வயசுல உபயோகித்த பல பொருட்கள் பல பெயர்கள் இப்போது இல்லை.. அவற்றை நினைவு கூற ஒரு பதிப்பு...
1 அரிக்கேன் விளக்கு and முட்ட விளக்கு:
கரண்டு போயடுச்சுனா ஒடனே தேடனும் இது ரெண்டும் எங்கே இருக்குனு. ஆனா இப்போ UPS . கரண்ட்டு போயிடுச்சானு கேட்டு பீல் பண்ணுறது இல்ல... UPS போயடுசுனாதான் கஷ்டம்.
2 ரெண்டு கண்ணா and டின்னு மாக்கான்...
இவங்க ரெண்டு பேரும் இல்லனா நம்ம வீடு சிங்கங்கள பயம் காட்ட சிங்கம் வந்தாலும் முடியாது... (நான் மட்டும் இதுக்கு விதிவிலக்கு)... இப்போ யோசிச்சு பார்க்கும் போது ரெண்டு ரூமா காட்டியே நம்மள பயம் காட்டி அடக்கி வச்சு இருக்காங்க...
3 சிறுவர் மலர் and காமிக்ஸ் புக்...
வெள்ளிகிழமைனா ஒரு பெரிய சண்டையே நடக்கும்... யாரு அந்த புக் first படிக்குறதுனு... மாயாவி, இரும்புக்கை மாயாவி, பிரம்போ ரொம்ப விரும்பி படிச்சா கதாபாத்திரங்கள்.... ஆனா இப்போ யாரு அதெல்லாம் படிக்குறா... இப்போலாம் GOD OF WARS அப்புரம் என்ன என்னமோ பெற சொல்லுறாங்க...
4 கேப்பார்கடுக்கி...
இந்த பெற வச்சே நம்ம கேள்விதிறனையும் மழுங்க அடிசுடாங்க நம்ம வீடு mummys எத கேட்டாலும் கேப்பார்கடுக்கி..
காணாமல் போன விளையாட்டுகள்:
- ciggrette அட்டைல கட்டமா ஒன்னு செஞ்சு கலால செதுக்குற விளையாட்டு...
- பம்பரம்... ரெண்டுரூவா பம்பரம்... அது வெட்டு வாங்கிட்ட ஐயோ கழுத்துல வாங்குன மாதிரி ஒரு பீல்... இப்போ அதெல்லாம் பாக்க முடியல... நம்ம பம்பரத்த வேட்டுனவனோட பம்பரத்த சம்மட்டி அடிக்குற சுகம் இறுகிய அப்பப்ப...
- பளிங்கி... ஸ்கூல் ல std இருக்குறா மாதிரி இதுலேயும்... நான் ரெண்டு மூணு னு விளையாடிகிட்டு இருக்கும் போது சபீர் பாய் ஜூபைர்பாய் 20 50 100 . பாய்ட்ட கடன் வாங்குன பலிங்கிய தோத்துட்டா பதில் சொல்ல பயம் இருக்கும்... ஆனா பாய்ங்க திட்ட மாட்டாங்க... தம்பி இன்னிக்கு உன் கை சரி இல்ல விளையாடாத... இவளோ தான்...
- கிட்டி புள்ள... நமக்குள்ள ஒரு சச்சின் கங்குலி ஷேவாக் ஜாகிர் எல்லாம் அப்போவே இருந்து இருக்காங்க... surveyour கூட அவளோ கரெக்ட்ஆ அளப்பாங்கலான்னு சந்தேகம் தான்.. பயபுள்ளங்க சொத்த அளக்குறமாதிரி ஒரு mm கூட விட மாட்டானுங்க... பீர்மா வீட்ல எப்டித்தான் பொறுத்துகிட்டன்களோ ....
- கொத்துவால்... குற்றால துண்டும் நாலு புளியான்கொட்டையும் தான் தேவை... ஆன பல பேர அழவைகுற ஆட்டம்... யப்பா.. திருடனுக்கு உள்ள நம்பர் விழுந்துடுசுன.. அடி வாங்காமையே கண்ணுல தண்ணி வரும்..
எங்க காலத்துலேயே இவளோ மாறிடுச்சுன்ன பாப்புங்க நிறைய பாத்து இருப்பீங்க...
Absolutely spechless........ You drag me to the Greeny memories; which never fades forever.. Your lines inspires me to write about our past memories..
ReplyDelete